முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கற்பனையில் நிஜம் கலந்த ஒரு கதை


இந்தப் பதிவ நீங்க படிக்க ஆரம்பிக்கும் போதே ஒரு புதிய உலகத்திற்குள் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும். புதிய உலகம் தேடி பயணிப்போம் பயணிகளாய்..

எல்லாவிதமான சராசரி மனிதர்களின் தேடலும் முடிவும் காலை தொடங்கி இரவுக்குள் அஸ்தமனம் ஆகிவிடுகிறது .மிகச்சிலரின் வாழ்க்கை மட்டும் இரவின் இருளில் தொடங்கி விடியலுக்குள் முடிவு பெறுகிறது.அந்த இரவு தேசத்தின் இளவரசி திவ்யா என்கிற திவ்யதர்ஷினியின் வாழ்க்கையை அவள் வழியில் அறிவோம்.


மழைக்கால ஈசல்கள் போல ராத்திரி ஒன்பது மணிக்கு அந்த ரோட்டுல இருக்குற எல்லா பஸ் ஸ்டாப்லயும் நாங்க எல்லோரும் யாருக்காவது காத்திருப்போம்.எங்களது ஆடையும் அலங்காரமும் எங்களை அத்தனை இருளிலும் வெளிச்சமிட்டு காட்டும் .காயமின்றி காசோடு வீடு திரும்பணும்னு வேண்டுதலோட கிளம்புவோம்.எப்படியும் என்னை போல 25 வயச தாண்டாதவங்க எதாவது ஒரு அறைக்குள் எளிதில் அடங்கிருவோம்.ஆனால் 40 தாண்டியவங்க நிறைய நாள் வெறும் கையோட பசியோட காத்திட்டே இருப்பதை பாக்க முடியும் .வாங்குற பணம் எங்களோட மருத்துவ செலவுக்கும் மேக்கப் செலவுக்கும் போலிஸ்காரங்களுக்குமே சரியா இருக்கும் .அப்புறம் எங்க நாங்க சேமிக்கறது.உண்மைய சொன்னா இப்ப நான் பாக்குற எல்லா ஆம்பளைங்களும் எவ்ளோ அழகா டிரஸ் போட்டிருந்தாலும் அம்மணமாவே தெரியுறாங்க என்னோட பார்வையில் .

நான் இப்படி மாற சினிமாதனமான காரணம் எதுவுமே இல்லைங்க .எங்கப்பாவோட மரணத்துக்கு பிறகு எங்கம்மா ஒருத்தர நம்பி இந்த ஊருக்கு வந்தாங்க .மூணு மாசம் குடும்பம் நடத்திட்டு அவரும் காணாமல் போயிட்டார் .தனியா போராட முடியாத எங்கம்மா இந்த தொழிலுக்கு வந்தாங்க .வெளி உலகத்துக்கு போய் சாதரணமான வாழ்க்கை வாழணும்னு தெரியாத என்னால் எங்கம்மாவோட மரணத்துக்கு அப்புறம் எங்க போறதுன்னே தெரியாத சமயத்துல எங்கம்மா உடலில் நெளிந்த விஷபாம்புகள் என் மேல படர்ந்து தன்னோட விஷத்தை கக்க தயாரா இருந்தாங்க .என்னோட வாழ்க்கையே நிர்வாணமானது தான்னு முடிவு பண்ணி என்னையும் தங்களின் உடற்பசிக்கு இரையாக்கிட்டாங்க.நாளுக்கு நாள் அந்த வலிகள் பழக்கம் ஆச்சு .நான்கு சுவர்களுக்குள் ஒரு வாழ்க்கை சுழற்சி .ஒரு ஒவ்வொரு ஆணிற்கும் இரண்டு முகங்கள் ஒன்று காமத்திற்கு முன்பு (கா.மு)இன்னோன்ற

ு காமத்திற்கு பின்பு (கா.பி)இது தாங்க தினமும் நான் பாக்குற வகையில் .

ஒரு நாள் என்னை ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்க சொன்னாங்க .நானும் காத்துட்டு இருந்தேன் .அப்ப ஒரு பெரியவர் வயசு அம்பதுக்கு மேல இருக்கும் .அவர் வந்ததும் நான் சேலையை கழட்ட ஆரம்பிக்கும் போது "ஒரு நிமிஷம் ப்ளிஸ் .நான் இதுக்காக வரல .கொஞ்சம் பேசணும் அவ்ளோ தான்.இந்த வாரத்துல நான் பேசுற ஆறாவது பொண்ணு நீ.யாருமே ஒத்துக்க மாட்டேங்குறாங்க.எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க .பெரியவன் லண்டன்ல செட்டில்டு ஆகிட்டான் .இரண்டாவது பையன் நல்லா படிச்சான் .நல்ல வேலைக்கு போய் நிறைய சம்பாரிச்சான்.ரோம்ப நல்ல பையன் .எந்த கெட்ட பழக்கமும் கிடையாது .பெத்தவங்களுக்கு பெருமை வாங்கி தந்த பையன் .இப்ப சாவுக்கு ரோம்ப பக்கத்துல வந்துட்டான்.அவனுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்சிடென்ட்ல தலையில் பலமான அடிப்பட்டு மூளை இடது பக்கத்துல இருந்த பாதிப்பு இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் அவனை கொன்னுட்டு இருக்கு.எல்லா டாக்டரும் கைவிட்டுட்டாங்க.அவன்ட்ட எங்களால சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்க கூட முடியல .அவன் மரணத்த தடுக்க முடியல ஆனால் அவனோட மனசுக்குள்ள மத்த பசங்கல மாதிரி எவ்ளோ கனவுகள் இருந்திருக்கும்

.அவனுக்காக ஒரு துணை தேடி வரல அவனுக்கு மரணம் பற்றிய நினைப்பு வராமல் பாத்துக்க நல்ல இணை வரணும் .நீ மட்டும் அத செஞ்சா இனி உனக்கு இந்த நரகம் திரும்ப வேண்டியதில்லை .உனக்கு தேவையானத செஞ்சு தர்றேன் .இந்த கார்டில் என் பையன் போன் நம்பர் இருக்கு.எடுத்துக்கோ.போய் பாரு .ஒரு அப்பா இப்படி செய்யலாமான்னு எனக்கு தெரியல .இப்ப என் பையனுக்கு என்னதவிர யாருமே நல்ல நண்பன் இல்லைங்கற பட்சத்தில் நான் இத செஞ்சு தான் ஆகணும் .கொஞ்ச நாள் அவனும் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பாக்கட்டும்."சொல்லிட்டு கிளம்பிட்டார்.

நிறைய யோசிக்கல .அவரு தந்த போன் நம்பர் மற்றும் அட்ரஸ் எடுத்துட்டு மறு நாள் கிளம்பிட்டேன் .அது ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ஸ்.24 வது மாடியில் வீடு .காலில் பெல் அழுத்தியதும் அவர் வந்து கதவு திறந்தார் .அவர பாத்தா ஒரு நோயாளின்னு சொல்ல முடியாது.அவ்ளோ அழகு .அமைதியான குணம் .என்ன உள்ள வரச்சொல்லி "ஸாரி எங்கப்பாக்கு என்ன கொஞ்ச நாள் சந்தோசமா வச்சுகணும்னு ஆசை.அதுனால தான் உங்கள இங்க அனுப்பி வச்சிருக்கார் .எனக்கு அதுல விருப்பம் இல்ல .எங்க அம்மா அப்பா பீல் பண்றத பாக்க முடியல .அதுனால தான் இங்க வந்தேன் .நீங்க இங்க ஒரு விருந்தாளியா இருக்கலாம் .எனக்கு விருந்தாக வேண்டிய அவசியம் இல்லை.நீங்க சுதந்திரமாக இருக்கலாம் .உங்களுக்கு கிடைக்குற பணத்த நான் தடுக்க விரும்பல .நீங்க அந்த ரூம்ல தங்கிக்கங்க.நான் இந்த ரூம் சரியா?"என்று கிளம்பி ரூம்குள்ள போய்ட்டார் .

அந்த பெரிய வீட்டில் இருவர் மட்டும் .அவர் நிறைய புக் படிக்குறார்.சாய்ந்திரம் வாக்கிங் போறார்.எப்பவாவது சிரிக்குறார்.அவரே சமைக்குறார் எனக்கும் .இரண்டு நாள் கூட என்னால இருக்க முடியல .கிளம்பிட்டேன் .சொல்லிட்டு கிளம்ப காத்திருந்தேன் .அவர் வந்ததும் "நான் கிளம்புறேன் .ரோம்ப போர் அடிக்குது .நீங்க பேசுறதும் இல்ல .ஜெயில்ல விட இது மோசம் .நான் கிளம்புறேன் .உங்க பணம் வேண்டாம் சார் "என்று கிளம்பியதும் அவர்"கொஞ்சம் பொறுமையா இருங்க .என் குணமே அப்படித்தான் .இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க கிளம்பிறலாம்.நான் சந்தோசமா இருக்கேன்னு என் அப்பா நினைக்கனும்.ப்ளிஸ் "என்றதும் நான் "அப்போ நீங்க என்கிட்ட நிறைய பேசணும் .நான் தான் சமைப்பேன்.அப்புறம் நைட்ல என்ன வெளிய கூட்டிட்டு போகணும் .சினிமா ,பார்க்குன்னு சரியா"?என்றதும் சரி என்று தலையசைத்தார் .மறு நாள் காபியுடன் குட்மார்னிங் சொல்லி எழுப்பினேன்.கொஞ்சம் கொஞ்சமாய் பேச துவங்கினார்.சிரிக்கவும் ஆரம்பிச்சார்.ராத்திரியில தினமும் படத்துக்கு போவோம் .இந்த பத்து நாட்கள் என்னோட இரவுகள் அமைதியானது.இறுக்கம் இல்லாத தூக்கம் .எங்களுக்குள் ஒரு அழகான நட்பு படர்ந்தது .ஆனால் எனக்குள் சின்னதாய் ஒரு தயக்கம் .அவருக்கு தாம்பத்ய வாழ்க்கை தரவே நான் வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் .ஆனால் அவருக்குள் அதற்கான தூண்டுதல் சிறிதும் இல்லை.அவர் பெண்களை மிகச்சரியான கோணத்தில் அணுகும் லட்சத்தில் ஒருவராக இருந்தார் .

ஒரு நாள் அவரோடு பேசும் போது "என்ன உங்களுக்கு புடிக்கலயா ?"என்றதும் "என்ன திடீர்ன்னு சந்தேகம் ?"என்றார் .பதிலுக்கு நான் "எனக்கு உங்கள ரோம்ப புடிச்சிருக்கு .இதுவரைக்கும் எனக்கு புடிச்சிருந்த யார் கூடவும் நான் இருந்தது இல்லை.இன்னும் கொஞ்ச நாள்ல நான் போயிருவேன் .அதுக்குள்ள ஒரே ஒரு நாளாவது எனக்கு புடிச்ச ஒரு ஆள் கூட இருக்கணும்னு தோணுது .இப்படி கேக்க வெட்கமா இருக்கு.இருந்தாலும் கேட்காமல் இருந்துட்டா இங்கிருந்து போனாலும் நிம்மதியாக இருக்க முடியாது."என்றதும் எந்திரிச்சு போய்ட்டார் .நானும் படுத்து நல்லா தூங்கிட்டேன்.ரா

த்திரி இரண்டு மணிக்கு மேல என் அருகில் யாரோ படுத்திருப்பதை பார்த்து எழுந்தேன் .அது அவரே தான்.அவர பாத்ததும் என்னை அறியாமல் முதன்முறையாக அழுதேன் .ஜன்னல் வழியாக தெரிந்த நிலவு வெளிச்சத்தில் என் கண்ணீர் துடைத்து என்னை தன் வசப்படுத்தினார்.முதன்முறையாக ஒரு ஆணின் தீண்டுதலில் உடல் அனலாகிறது.கண்கள் அலை பாய்கிறது .உதடுகள் சுவாசம் கலக்கிறது.நிர்வாண கோலம் கவிதையாகிறது.இந்த கலப்பு ஆயுள் வரை தொடரட்டும் என்கிறது இதயம் .இதயத்துடிப்புக

ள் உரசியதும் தாழ்ந்து நீள்கிறது.இந்த இரவு என்னில் காதல் விதைக்கிறது.விட

ியற்சூரியனின் கதிர்கள் கை நீட்ட தேகம் கலைந்து நீரில் குளிர்ந்தோம்.எங்களுக்குள் புதுவித உறவு தொடக்கம் .ஒரு புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பிழையாய் அச்சிடப்பட்ட முன்னுரை. அன்று காலை முதல் எங்களுக்குள் புது மாற்றம் .குறும்பு பார்வைகள் ,சிணுங்கல்கள்,மெல்லிய தீண்டல்கள்,அழகான தூண்டல்கள்.இதயங்களின் சங்கமம்.ஒரு ஆணின் மார்பு சூட்டில் முகம் புதைப்பது அழகு கவிதையே!

காதலை உணர்த்தாமல் உணர்ந்தோம்.காதலால் காதலை காதலை தாண்டி காதலித்தோம்.ஆண்டுகள் கடந்து வாழ முடியாத காதலர்களின் காதல் நாளை யுகம் தாண்டி வாழ்வது அறியாமல் காதலித்தோம்.


ஒரு நாள் நாங்க வெளியில் சென்றுவிட்டு திரும்பும் போது அவரோட அப்பா வந்திருந்தார் .தனது மகனின் சிரித்த முகம் பார்த்து"சரிப்பா கிளம்பலாம் .நாளைக்கு லண்டன் பிளைட்.இன்னைக்க

ு போய் ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு கிளம்பலாம் "என்றதும் அவர்"அப்பா இந்த ஆபரேஷன் பண்ணினாலும் இன்னும் ஒரு வருஷம் தான் இருப்பேன் .அதுல ஆறு மாசம் ஆஸ்பிட்டல்ல முடிஞ்சு போயிரும் .எனக்கு அது வேணாம் .எனக்கு இருக்க போறது மூணு நிமிஷமா இருந்தாலும் உங்க கூட அம்மா அண்ணன் கூட ஒண்ணா இருக்கணும் .நம்ம உலகத்துல என் திவ்யாவும் இருக்கணும் ."என்றதும் அவரோட அப்பாவுக்கு மட்டுமில்ல எனக்கும் அதிர்ச்சியா தான் இருந்தது .கடைசி வரையில் அவர் லண்டன் போக சம்மதிக்கல.


ஒரு நாள் மயங்கி விழுந்துட்டார்.ஆஸ்பிட்டல்ல சேத்தேன்.அவுங்க குடும்பத்துல எல்லோரும் வந்துட்டாங்க .அது அவரோட கடைசி நொடிகள் .எல்லோரும் போய் பேசிட்டு வந்தாங்க .கடைசியா நானும் .என்ன பக்கத்துல வர சொன்னாரு போய் நின்னேன் .மெதுவா என் வயித்த தொட்டு பார்த்து "திவ்யா இது உண்மையான காதல் பரிசு.பத்திரமா பாத்துக்கோ.இனி நான் சாகலை உன் கூட வாழ போறேன் எப்போதும் "என்றவாறு அவரோட குரல் சிறு முணங்களாய் குறைந்து காற்றில் கரைந்தது .நான் அவர்கிட்ட சொல்லாமலே அவருக்கு எப்படி தெரிந்திருக்கும் குட்டி விஜய் எனக்குள் வளர்வதை.!


அவரோட மரணத்துக்கு பிறகு அவுங்கப்பா கொடுத்த பணத்த நான் வாங்கல .எனக்கானத நான் வாங்கிட்டேன் அவர் மூலமா.


என்னை அறியாத புது உலகம் தேடி பயணிக்கிறேன் உங்களை போன்ற பயணியாய்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!