முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆழியானவள் அவள் !

அலாதி ஆசைகள் தான் எத்தனை எத்தனை அடி கிடந்தே பழகிப்போன அந்த ஆழ்கடல் நீருக்கு... எழும்பி மேல் வந்து உச்சி படரும் சூரிய ஒளியை முத்தமிட வேண்டும்.. அலையோடு அலையாய் கவலையின்றி ஆடிட வேண்டும்.. கணத்திற்கு கணம் தலை வருடி முத்தமிடும் காற்றை தீராது காதலிக்க வேண்டும்.. என்னோடு என்னாய் கலந்து போகும் மழையில் நனைய வேண்டும்.. ஆரவாரமாய் ஆர்ப்பரித்து இன்னும் இன்னும் என எல்லையற்று நீள வேண்டும்.. கரை வந்து அழும் அந்த யாரோ‌ ஒருவருக்கு ஆறுதலாய் அவர் கால் தழுவ வேண்டும்.. நண்டுகள் துரத்த வேண்டும்.. பறவைகளை சந்திக்கவேண்டும்.. இப்படி பலவித ஆசைகள் அதற்கு.. இயல்பாகவே இத்தனை தன்மை உடைய நீரை ஆழ்கடலில் அடைத்து போட்டது யாரோ.. அவ்வாறே அவளும்.. அவளையும் எதன் பெயராலும் எதனுள்ளும் அடைத்திடாது அவளை அவளாய விட்டாலே அவளை அவள் காண்பாள், எங்காகினும் யாரிடத்தாகினும் அவளை அவள் மீட்டுக் கொள்வாள்.. ஆழியானவள் அவள்..