முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னையும் யோசி !

என்னதான் வேண்டும் உனக்கு? உள்ளூர கண்கள் ஊடுருவ என் நேர் நின்று கேட்கிறாய்..

ஒரு போதும் நீ நான் கேட்பதை தரப்போவதில்லை என எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்..

ஏனெனில் இங்கு நீ எனக்காகவென யோசித்ததை விட என்னையன்றி‌ யோசித்த மற்றவைகளின் எண்ணிக்கை மிக அதிகம்..

கண நேரமும் சிந்திக்காது ஒவ்வொன்றுக்கும் காரணங்களை அடுக்கி விட்டு கடமை முடிந்தது என கண்டு கொள்ளாமல் செல்லும் நீ, கண நேமேனும் சிந்தித்திருக்கலாம் காரணங்கள் தாண்டி என்னையும் கொஞ்சம்..

சரி இருக்கட்டும்..

இந்த கணம் ஒரு பட்டாம்பூச்சியாக மாறி
என்னை அணைத்துக்கொள் உனக்குள் இறுதியாக..

கொஞ்சம் எனையும் பறக்க வை உன் வானத்தில்..

பிறகு, உன் விருப்பம் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!