முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பொய் போதும்!

எனக்கென நீ உதிர்க்கும் சொற்கள்..

எனக்கென மலரும் உன் இதழோரப் புன்னகை..

எனக்கென நீ சிரமத்தோடு சூடிக்கொள்ளும் அந்த சிறிய ஒப்பனை..

எனக்கென வெளிப்படும் உன் வெட்கம்..

எனக்கென கொட்டிடும் அந்தக் கோபம்..

எனக்கென நீ தந்து போன வலிகள்..

எனக்கென என்பதில் எல்லாம் நீ கஞ்சத்தனங்கள் செய்ததே இல்லை எப்போதும்..

எனக்கென என்பதுனக்கு
அத்தனை சுகம்,
அத்தனை பிரியம்,
அத்தனை பிடித்தம்..

உனக்கென என்பதை எல்லாம் என் எல்லாவற்றோடும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன் நான்..

மீண்டும் மீண்டும் இந்தக் காலம் ஒரு பாடலிலோ, ஒரு பெயரிலோ, ஒரு பேருந்திலோ, ஒரு இரவிலோ உன்னை என்னிடம் சேர்த்து விடுகிறது எனக்கென..

அதே காலம் என்னிடமிருந்து உனக்கென எதுவும் சேர்த்ததா ??

பதில் வேண்டாம்..

ஒரே ஒரு பொய் சொல் அது போதும் இப்போதைக்கு எனக்கென !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!