முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம்‌ ஒரு நல்ல எழுத்தாளன்..

பொழுது போகாவிட்டாலும்
பொழுதுகள் போய்க் கொண்டு தான் இருக்கின்றன,
போகத்தான் செய்கின்றன..

அலையற்ற ஆற்றில் சலனமே அற்று பயணித்து செல்லுமொரு இலையினைப் போல, முகில் வானின் முகட்டில்
கைகள் அகல விரித்து அசைவே அற்று பயணிக்கும் அந்த வல்லூறைப் போல கடந்து போகின்றன சில பொழுதுகள் ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல்..

காலத்தின் கைகளை இறுகப் பற்றி ஓர் அங்குலமேனும் அதை இழுத்து நிறுத்திவிடவோ, ஓயாது ஓடிக்கொண்டே இருக்கும் அதன் கால்களுக்கு எது கொண்டேனும் அரை சாண் அளவிற்கேனும் குழிபறிக்கவோ முடியுமா என்ன நம்மால்?

காலம் ஒரு நல்ல எழுத்தாளன்;
நீயும் நானும் நல்ல வாசகர்கள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!