முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் பிரிவு...



என்ன செய்துவிடப் போகிறது ஒரு பிரிவு பெரிதாய் ??

கண்ணெட்டா தொலைவிற்கு தூரம் தள்ளி வைக்கும்..

பேசிக் கொள்ள வேண்டாவென்று வார்த்தைகள் துண்டித்து மௌனத்தில் சிறை வைக்கும்..

கொட்டிடும் மழையில் குடைக்குள்ளே நனைய முடியாதபடி அடைத்து வைக்கும்..





சத்தமேயின்றி முத்தமிட்ட நினைவுகளைக் கிளறிக் காட்டி சத்தம் போட்டு அழ வைக்கும்..

விடியா வானம் பார்த்து விடிய விடிய கதை பேசி கதைத்திட தடை விதிக்கும்..



அவ்வளவுதானே..

காதல் இதுதான் என நாம் கண்டறியும் முன்னரே உன்னுள் கலந்த என்னையும், என்னுள் கலந்திட்ட உன்னையும் இந்தப் பிரிவு என்ன செய்திடப் போகிறது..

இந்தப் பெரும் காதலை இந்தப் பிரிவு என்ன செய்து விடப் போகிறது . .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!