முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரவிலும் அதன் இசையிலும் நீ !!

நானே சேகரித்து கொண்ட உன் பொருட்கள்,
உன் பரிசுகளாலேயே நிரம்பிப் போன என் அறை அலமாரிகள்,
உன்னிடமிருந்து திருடிக் கொண்ட உன்னுடையதும், நமக்காய் நாம் எடுத்துக் கொண்டதுமாய் பழைய புகைப்படங்கள்‍,
உனக்குப் பிடித்த இடங்கள்,
உன் ரிங்டோன்,
உன் உடை வாசம்,
உன் பெயர் என இவையேதும்
உனை நினைவுபடுத்தினால்
கூட பரவாயில்லை எனக்கு..

யாரோ யாரையோ நினைத்து
எழுதி வைத்த பாடல் வரிகளுக்கும்,
எவரோ எதற்கோ மீட்டிய
வயலினுக்கும், பியானோவுக்கும்
இரவெல்லாம் உனை நினைத்து உறக்கமின்றி தலையணை நனைய
நான் கண்ணீர் வடிப்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை எனக்கு !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!