முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னமும் ஏதோ ஒன்றில் நீ !!


வெகுதூரம் சென்று விடவில்லை நீ..
ஜன்னலோரம் திரும்பி மறைக்கும் கண்ணீர்..
நெஞ்சுத் தைக்கும் ஏதோ ஓர் பாடல்..
பிறர் பார்க்கும் முன் வீடு அடைத்து அழ வேண்டும் என வேகம் கூட்டும் நடை..
உன் பிறந்த நாளன்று தொண்டைக்குள் இறங்க மறுத்து, சிக்கிக்கொண்ட சோற்றுருண்டை..
நாம் நின்ற தேநீர் கடை முன் நடை தளர்த்தும் கால்கள்..
எனப் பல ரூபங்களில்,
வாழ்கிறாய் நீயும்,
வாழ்கிறது நம் காதலும்,
வாழ்கிறேன் நானும்,
மறந்தோ, நினைத்தோ,
இறந்தோ, வாழ்ந்தோ . .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!