முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரோ போல் நீ !



உன்னைப் பார்த்துவிட்டு யாரோ போல்
கடந்து செல்லும் கணங்களில் எல்லாம்,
முன்பு ஒருமுறை அதே சாலையில் என் கை விரல்களை
நீ இறுக கோர்த்த போது துடித்ததை விட
இருமடங்காகிறது இதயத்துடிப்பு..

இப்போது
பற்றிக்கொள்ள,
ஊடல் கொள்ள,
மகிழ்நதிருக்க,
கதறியழ
என்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம்
உன் நினைவுகள் மட்டுமே..

முதலும் இறுதியுமாய்
உன்னை மறந்து போக முடிவெடுத்து
நான் உறங்கச் சென்ற
மிக நீண்ட இரவுகளை எல்லாம்
கடந்து செல்ல நான் பட்ட
பெரும்பாடு யாதென்பதை
நீ அறிவாயா ?

தட்டப்படும் கதவுகள் அனைத்தும் திறப்பதில்லை,
கேட்கப்படும் அன்பு எல்லோரிடத்திலும் கிடைப்பதில்லை..
ஆனால் சிலுவைகள் மட்டும் காத்திருக்கின்றன,
இப்படியான நினைவுகளை சுமந்து செல்ல !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!