முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிழல் உலகம்


எண்ணம் எல்லாம் எழுத்தாய் மாறுவதில்லை
நிழலாய் போனவை பல..
நிழலாய் போன எழுத்துக்களுக்கு
நிறமூட்ட நினைத்தால்
காலம் அனுமதிப்பதில்லை..

வண்ணங்கள் பல இருந்தாலும்
கருப்பு வெள்ளை கண்களுக்குள்
அடங்கிப் போகும் அவையாவும்..
அடங்கிப் போன வண்ணங்கள் யாவும்
வெளியேற முற்படுவதில்லை..

இதயவாசல் வந்த பல சொற்களுக்கு
இதழ்வழி படியேற வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை..
படிதாண்டா சொற்கள் படியேறினால்
பல உறவுகள் நம் படியேறப்போவதில்லை..

முகமூடி அணிந்த முகங்களெல்லாம்
உண்மை முகம் காட்டுவதில்லை..
உண்மைமுகம் கண்டால்
தீண்ட முற்படுவதில்லை காற்றும் கூட..

உயர்ந்த உள்ளங்கள் என்றும்
துயரங்களுக்கு தலைசாய்வதில்லை..
துயரங்களுக்கு தலைசாய்ந்தால்
உயரம் தொட நேரமில்லை..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!