முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Blue tick பரிதாபம்..

அடிமனதின் ஆழம் தாங்காது
மேலெழும்பி வரும் என் மன்றாடல்களையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் ஒரு வார்த்தை விடாது கொட்டி எழுதி முடித்து,
அதை கண்ணாடிக் குப்பி ஒன்றிலிட்டு
கடலில் வீசியெறிந்து விட்டேன்..
எங்கோ தொலை தூரத்திலிருக்கும்
உன்னை அது வந்து சேரும்,
நீ எனை மீட்க வருவாயென நம்பி
இந்த தனித்தீவில்
அமர்ந்திருக்கிறேன் தனியாக..

இங்கு பச்சை விளக்கு ஒளிரும்போதெல்லாம்
என் மீட்புக் கப்பல் வந்துவிட்டதாக
எண்ணிக்கொண்டு எட்டிப் பார்த்து
பின் ஏமாந்து போகிறேன்..
இருந்தும் இன்னமும் கொஞ்சம் நம்பிக்கையோடு மீண்டும் பார்க்கிறேன்,
பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்..
இதோ என் தீவும் மூழ்கத் துவங்கிவிட்டது 
மெது மெதுவாக..
எத்தனை முறை விளக்கு ஒளிர்ந்தாலும்
என் கண்ணாடிக் குப்பியில் மட்டும் அந்த 
எழவெடுத்த Blue tick விழுவதாக இல்லை !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!