முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இத்தனை எளிது இந்த வாழ்க்கை !!

இந்தியோ சமஸ்கிருதமோ இன்னும் வேறேதோ, எனக்கு வேண்டின் நான் அறிந்து கொள்கிறேன்..

புல்லோ, புலாலோ புசிப்பது எதுவாயினும் என் நா விரும்புவதை நான் உண்டு கொள்கிறேன்..

கறுப்போ, காவியோ கண் காணா கடவுள் வேறாருமோ, எனக்கு நம்பிக்கை இருப்பதை நான் தரித்துக்கொள்கிறேன்..

இவ்வளவு எளிது, இத்தனை எளியது தான் இந்த வாழ்க்கை..

உள்ளது எதுவும் உனக்கு வெறுப்பாகின்,
நீ வாழ விழையாதிருப்பின் செத்தொழி..

நான் கொண்டாடித் தீர்த்துக் கொள்கிறேன், உன் காலத்தையும் சேர்த்து !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!