முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் மட்டும் நகராமல் !!

பார்த்தாயா இந்தக் காலம் தான் எவ்வளவு வேகமாய் நகர்கிறது, அதுவும் நம்மை இழுத்துக்கொண்டே..

நெற்றி சறியும் நரைமுடி ஒதுக்கும் காலத்திற்கு வந்துவிட்டாய் நீ..
கண்ணாடியின்றி பொடி எழுத்துக்களை தடவத் தொடங்கி விட்டேன் நான்..

ஆனாலும் பாரேன்,

நினைவோடையில் மிதக்கும் அந்த காட்சி மட்டும் இன்னும் இளமை ததும்ப அப்படியே நிற்கிறது..

அதில் எப்போதும் ஒருவன் இன்னமும் தரை தேய bell bottom அணிந்து கொண்டு ஒய்யாரமாக நிற்கிறான்..
அவனைக் கண்டும் காணாதது போலவே அந்த ஒருத்தி எப்போதும் தரையோடு விரல் தேய, தலைமயிர் கோதியபடி நிற்கிறாள் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!