முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதற்காகத்தான் !!

 சிறுவயதில் வன்புணரப் பட்ட பெண் அவள்.. யாரோடும் இயல்பாய் ஒட்டாது, எந்நேரமும் ஏதோ ஒன்றினை தூக்கி சுமந்தபடியே திரியும் அவள் எளிதில் பேர் வாங்கி விட்டாள் introvert என்றும் எக்கச்சக்க திமிர் பிடித்தவள் என்றும்..‌ இருவரும் பழக வேண்டிய சூழ்நிலை வந்த போதும், அது எந்த பேச்சாயினும் எட்டடி தூரம் தள்ளி நின்று தான் என சொல்லாமலே புரிய வைத்து விட்டாள் எனக்கு.. பழகத் தொடங்கி பல மாதங்களுக்கு பிறகு, எதேச்சையாக தனியாய் இருந்த சூழலில் கேட்டேன், 'ஏதும் பிரச்சனை இருக்கா உனக்கு, சொல்லு என்னால முடிஞ்சதுனா எதாவது பண்றன்' அப்படி சொன்னதும், அடைச்சு வச்ச அணைகள திறந்து விட்ட மாதிரி அவ்ளோ அழுகை.. 'என்னால யாரையும் நம்ப முடியவில்லை. யாரோடும் ஒன்ற முடியவில்லை. உங்கள் அருகில் இருந்துகொள்ளட்டுமா' அப்படினு குரல் ஒடைஞ்சு தேம்பிக் கொண்டே கேட்டாள்.. ச்சீ ஏன்டி பைத்தியமே இதுக்கு போய் இவ்ளோ கலங்குற. இங்கே வா. என்று அருகில் அணைத்து அவள் கரங்கள் எடுத்து என் உள்ளங்கையில் வைத்து அடைத்துக் கொள்கையில்,


என்னைக் காதலிப்பீர்களா? என்றாள், அவ்வளவு ஏக்கம் அந்த குரலில்..

ம்ம்ம் காதலிக்கிறேனே என்றதும் தாயைக் கண்ட குழந்தை போல தாவி வந்து அணைத்துக் கொண்டாள்.. இப்போது இங்கே என் மார்பில் வழிய விடுகிறாள் அவள் கண்ணீர் நதியை..

அவளுக்கு சம்மதம் தெரிவித்த அன்றிரவே ஒரு கனவு வந்தது

கனவில் பத்து வயதுப் பெண்ணாக வருகிறாள். பத்து வயதில் என்னைக் காதலிக்கிறேன் என்றாள். “என்னோடு என் வீட்டுக்கு வருகிறாயா?" என்றேன் நான். காதலன் அழைத்தால் வந்துதானே ஆகவேண்டும். சம்மதித்தாள். காதலர்கள் தனியாக இருந்தால் என்னவெல்லாம் நிகழுமோ அதற்கெல்லாம் யோசித்துப் பயந்தாள். வீடு அருகில் வர வர அவள் முகம் இன்னமும் இருள்கிறது. 'எனக்கு சாக்லேட் வேண்டாம் நான் வீட்டுக்குப் போகிறேனே' என்ற அவள் குரலில் ஏதோ ஒரு படபடப்பு.. 'உனக்கு யாரும் சாக்லேட் லாம் தரப் போறதில்லை, வா' என்று கூட்டிப் போனேன். நிலைவாசலுக்கு வந்ததும் அவள் முட்டைக் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. அவளுக்கு உடல் நடுங்கிற்று. 'இங்கேயே உட்கார்ந்துக்கலாமா' என்றேன். வேகவேகமாக சரியென தலையசைத்தாள். வாசல்படியில் நான் அமர்ந்து அவள் இரண்டாவது படியில் அமர்ந்து என் கால்களைப் கை பின்னி சாய்ந்து சற்று நேரத்தில் உறங்கியும் போனாள் அப்படியே. அவளை அசைத்து விடாது மெல்ல தலை கவிழ்த்து அவள் உச்சந்தலையில் முத்தமிட்டேன் நான்.. சட்டென்று தூக்கம் கலைந்தவனாய் அலைபேசி எடுத்துப் பார்க்க அதில் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி, 'இதற்காக தான், இந்த காதலுக்காக தான் இத்தனை நாள் ஏக்கமும்'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!