எப்போது
வருவாய் நீ ??
விழிகளில் நீர் தளும்ப யாரிடமோ தொலைபேசியில் இதே கேள்வியை
திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்..
நானோ, பிறரோ கவனிப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எந்த அவகாசமும் இல்லை அவளுக்கு..
எப்போது வருவாய்..
எனக் கேட்பதைக் தவிர இக்கணம் அவளுக்கு
இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவுமே இல்லை..
அவள் பிடிவாதமாக இருந்தாள்..
மன்றாடுதலுடன் இருந்தாள்..
அந்தக் கூட்டத்திலும் தனிமையாக இருந்தாள்..
எந்தக் கணமும் உடைந்து அழக் கூடியவளாக இருந்தாள்..
எத்தனை யுகங்களாய்
இதே குரலில்,
இதே ஏக்கத்தோடு,
இதே கண்ணீருடன்,
இதே கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று தெரியவில்லை..
வர வேண்டிய அந்த யாரோ ஒருவர் வராமலேயே இருந்துக் கொண்டிருக்கிறார் இன்னமும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக