முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் எனப்படுபவர் !!

உங்களை வருத்திக் கொண்டு ஏதேனும் செய்யச் சொல்கிறாரா..

உயிர் பலி கேட்கிறாரா..

உங்களின் மொழி தனக்கு விளங்காது என்கிறாரா..

நீங்கள் நினைத்தாலும் தொட முடியாத அளவில் இருக்கிறாரா..

அவருக்கென்று தனியாக ஒரு மெனு தயாரித்து வைத்துக்கொண்டு படையல் போடச் சொல்கிறாரா..

உங்களிடமிருந்து பிடுங்கி தன் சொத்துக்களை மட்டும் பெருக்கிக் கொண்டே போகிறாரா..

உங்கள் படுக்கையறையை நீங்களே அறியாது எட்டிப் பார்க்கிறாரா..

புரிந்து கொள்ளுங்கள்,
அல்லது முயற்சியேனும் செய்யுங்கள்..

கடவுள் எனப்படும் அவர்,
நிச்சயம் மனித சிந்தனையில் விளைந்த உயிர் பெற்ற ஒரு பொருளே !!

கருத்துகள்