முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயல்ல நான் !!

நீயல்ல நான்,
நீங்கிச் சென்ற பின்னும் நினைவுகளால் ஏங்க வைப்பதற்கு..

நீயல்ல நான்,
நகர்ந்து சென்று பிரிந்த பின்னும் உயிர் தகர்த்தி விழச் செய்வதற்கு..

நீயல்ல நான்,
நித்தம் ஏதோ ஒன்றின் சாயலில் வந்து நிகழ் கணத்தை உறையச் செய்வதற்கு..

நீயல்ல நான்,
விலகிய பின்னும் உன் எல்லா கவிதைகளிலும் ஓரமாய் ஒளிந்து வாழ்வதற்கு..

நீயற்ற அந்த நானால் இவையெல்லாம் உனக்கும் நிகழ்ந்திருக்குமாயின்,

மன்னித்து விடு இந்த என்னை !!


                                                                             ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!