உன்னைப் பார்த்துவிட்டு யாரோ போல்
கடந்து செல்லும் கணங்களில் எல்லாம்,
முன்பு ஒருமுறை அதே சாலையில் என் கை விரல்களை நீ இறுக கோர்த்த போது துடித்ததை விட இருமடங்காகிறது இதயத்துடிப்பு..
இப்போது
பற்றிக்கொள்ள,
ஊடல் கொள்ள,
மகிழ்நதிருக்க,
கதறியழ
என்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம்
உன் நினைவுகள் மட்டுமே..
முதலும் இறுதியுமாய்
உன்னை மறந்து போக முடிவெடுத்து
நான் உறங்கச் சென்ற
மிக நீண்ட அந்த இரவுகளை எல்லாம்
கடந்து செல்ல நான் பட்ட பெரும்பாடு யாதென்பதை நீ அறிவாயா ?
தட்டப்படும் கதவுகள் அனைத்தும் திறக்கப்படுவதில்லை,
கேட்கப்படும் அன்பு எல்லோரிடத்திலும் கிடைப்பதுமில்லை..
ஆனால் சிலுவைகள் மட்டும் காத்துக் கொண்டேயிருக்கின்றன, இப்படியான நினைவுகளை சுமந்து செல்ல !!
கருத்துகள்
கருத்துரையிடுக