முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருடனாவது பேச வேண்டும். போலிருக்கிறது !!

யாருடனாவது பேச வேண்டும்.
 போலிருக்கிறது..

திடீரென சில சமயங்களில் மனமொரு நீர்ச்சுழலென மாறிவிடுகிறது..

காரணம் ??
கடந்து போன கணம் வரை கண்டறியப்படவில்லை..

யாருடனாவது பேசினால் சுழலில் சிக்காமல் இருக்கலாம் எனத் தோன்றுகிறது..

சரி.. ஆனால் யாருடன் பேசுவது ??

என்னுடன் பேச யாருமில்லை என்றெல்லாம் சொல்லிடவியலாது..
தொட்டுவிடும் தூரத்தில், தொலைத்தொடர்பில் என என்னைச் சூழ்ந்திருப்போர் எத்தனையோ பேர் இங்குண்டு..

ஆனாலும் ஏனோ என்னுள் ஓர் அற்ற நிலை..

அப்படியே பேசினாலும் என்ன பேச ??

மௌனம்..
அது மட்டுமே மனதை ஓசைகளின்றி ஊசலாட்டும்..

சில நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது..

எவ்வளவோ சிந்தித்தும் என்னவென்றே புரியவில்லை எனக்கும்..

நடுக்கடலில் அலைகளின் தாளங்களுக்கு ஏற்ப ஆடும் கப்பல், அது எந்த மரக்கிளையின் மீதேறி தன்னை மீட்டுக்கொள்ள இயலும்..
தானே தான் மிதந்தேறி கரை வந்தடையும்..

அவ்வாறே நானும்..

ஆனாலும் கூட,
யாருடனாவது பேச வேண்டும் போலிருக்கிறது . .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!