முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழையில் அந்த மரத்தின் அடியில் !!

அந்த ஒரே மரம் மட்டும் தான், அந்த சாலையில் இருந்தது..
ஆள் நடமாட்டமும் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்..

தூறல் எல்லாம் தான் தாங்கி,
தனக்குக் கீழ் ஒதுங்கிய அந்த இருவருக்கும் இதத்தை தந்தது அம்மரம்..

மழைக்கால இருட்டு,
மங்கிய வெளிச்சம்,
ஆடை நனைக்கும் இதமான தூறல்
சொல்லவா வேண்டும்,
இருவரும் காதலில் தங்களை மறந்து லயித்துக் கொண்டிருந்தனர்..

மரத்தை சுற்றிச் சுற்றி ஓடுவதும்,
மாறி மாறி டூயட் பாடுவதும்,
உதடுகள் உரச கவிதை பரிமாறிக் கொள்வதும் எனக் கார்மேகக் காலத்தை கவிதையாக்கிக் கொண்டிருந்தனர்.. 

இப்போது தான் ஏழு வயது தொட்டிருக்கும் இருவருக்கும்..
இந்த வயசுக்கு இது கூட இல்லையென்றால் எப்படி..

மழை நின்றது ஒரு வழியாக..

கிளம்பிவிட்டார்கள் இருவரும்,
வழக்கம் போல புற்க்களை மேய !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!