முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் தனிமையும் !!

சுற்றிலும் நான்கு சுவர்,
அடைக்கப்பட்ட சாளரங்களும், கதவும்..

உத்திரத்தில் ஓயாது ஓடும் மின்விசிறி, மன ஓட்டத்தைத் தாண்டி செவிகளில் அதன் இரைச்சல், நிறுத்திவிட்டேன்..

நிற்க நேரமின்றி எங்கோ விறுவிறுப்பாக நடந்து கொண்டே இருந்தது கடிகாரம், பேட்டரியை கழற்றி வீசிவிட்டேன்..

ஏதோ ஒரு மூலையில் என்னைப் பார்த்து எகத்தாளமாய் சிரித்தபடி ஒளிரும் அலைபேசி,
திரையில் தெரிவது உன் பெயர் இல்லையெனினும் திராணியற்று நகர்கிறேன் அதை நோக்கி..

வீம்பாகவே இருக்கிறேன் அல்லது முயல்கிறேன்,
இருப்பினும் அவ்வப்போது திறந்துக் கொள்ளும் கண்களின் குழாய்களை மூட பதினோராவதாய்‌ உன் விரலின்றி சிரமப்படுகிறேன்..

இருந்தும் இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறோம் என்பதாய் ஓர் உணர்வு,
நானும்,
நீ தந்து போன இத் தனிமையும் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!