முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் இருக்கும் வரை !!

சில நூறு கவிதைகளுக்குப் பிறகு
வறண்ட பாலைவனமாய்
தெரிகிறது மனம்..

அத்தருணத்தில்
கடந்து செல்கிறாள்
அரக்கு நிறப்புடவை அணிந்த பெண்ணொருத்தி..

அடை மழையாய் கொட்டித் தீர்த்தது
ஓராயிரம் கவிதைகள்..

பின் உணராமல் என்ன செய்யும்
இக்கவிஞன் மனம்,
பெண் இருக்கும் வரை எல்லாம்
பெருங்கவிதைகள் வாழுமென !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!