புதிதாய் மலர்ந்த ஒரு சிவப்புப் பூ பச்சைக் குத்தியிருந்தது பாட்டியின் கைகளில்.. குத்திய நினைவு இல்லை கொஞ்சம் கூட அவளுக்கு!
எப்போதோ செத்துப்போன தன் நாய்க்குட்டியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறான் என் நண்பனொருவன்..
காதோரமாய் மறையும்படி காதலன் பெயரை குத்தியிருந்த தோழி,
பிறகு அது அர்த்தமற்று போற பெயரை பட்டாம்பூச்சி ஆக்கி விட்டாள்..
சாதுவான சக தொழிலாளி ஒருவன் கைகளில் முழங்கை வரை பெரிதாய் கழுகு ஒன்று கொடூரமாய் பார்த்தபடி..
கேட்டால் பார்த்த உடன் எல்லோருக்கும் பயம் வரணுமாம்!
எனக்கும் கூட ஆசைதான் எதையாவது டாட்டூ போட்டுக்கொள்ள..
அந்த அளவுக்கு பிடித்த விஷயம் தான் இன்னும் தெரியவில்லை, கிடைக்கவுமில்லை !!
கருத்துகள்
கருத்துரையிடுக