முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவை போதாதா !!

அடித்தொண்டை விரிய அண்ணாந்து பார்க்கையில் எல்லாம் வசீகரிக்கும் அந்த வானம்,
ஆளற்ற இந்த மாடிவெளியில் நானும் என் நாய்க்குட்டியும்,
அங்குமிங்கும் புத்தகத்தாளை புரட்டிப்போட்டு விளையாடும் காற்று, அமர்வதும் பறப்பதுமாய் அங்குமிங்கும் வட்டமடித்துக் கொண்டே ஒலியெழுப்பும் பறவையொன்று,
குடித்து முடித்து பாதி காய்ந்த குளம்பிக் குவளை,
கைநிறைய கொள்ளா அளவு கவிதை,
இசையால் இதயம் நிறைக்க ராஜாவின் கீதம்,

போதாதா இவை?

எப்போதும் உடன் பயணித்து உள்ளம் கிளறிப் பார்க்கும் இந்த வெறுமையை விரட்டியடிக்க !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!