முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கந்து வட்டி யார் கட்ட ??

பல்லாங்குழி ஆடயில
ஆடையில ரத்தமுன்னு
வீட்டோட அடச்சிட்டாளே
என்னப் பெத்த என் ஆத்தா..

பனையோலை பங்களால
பத்திரமா புடிச்சு வச்சு
போட்டோவுக்கு சிரிக்கச் சொல்லி
அதட்டுனாளே அத்தைக்காரி..

என் வயசு சிருக்கியெல்லாம்
பள்ளிக்கூடம் போகையில
எம்மனசு நொந்த கதை
எங்க போயி நாஞ்சொல்ல..

கல்யாணம் வேணாம்னு
கண்ணீரோட நான் கெஞ்ச,
அந்த அருவாளு அய்யனாரும்
அதை காது குடுத்து கேக்கலையே கொஞ்சங்கூட..

சிரிக்கவே தெரியாத ஒரு
சிடுமூஞ்சி ஆம்பிள.
எனக்குன்னு எங்கப்பன்
பாத்து வச்ச மாப்பிள்ளை..

சீதனமா வாங்கி வந்த சாமான் எல்லாம்
என் புருசன் சரக்கடிச்சே
சேட்டுக்கடை போயி சேந்துருச்சு..

மஞ்சளுல மின்னுன
என் கன்னம் ரெண்டும்
மருதாணியா செவந்துருச்சு
வாக்கப்பட்ட மனுசன் கிட்ட
நான் வாங்குன அடி கண்டு..

கள்ளிக்காட்டுக்குள்ள பூத்த
கமலமலர் மாதிரி
வயித்தில் வந்து தரிச்சானே
என் மவன் கருவாயன்..

சட்டி சட்டியா கள்ளச்சாராயம்
குடிச்சதாலோ என்னவோ
சட்டுனு போய் சேந்தான்
என் புருசன் மகராசன்..

என் புருஷன் போய்ட்டானு
சோகத்துல நான் கெடந்தா
கருமாதிக்கு வாங்கி வச்ச
கந்து வட்டி யார் கட்ட ??

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!