முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குந்தவை எனும் தேவதை!!

அடியே குந்தவையே..

போதும் இதோடு நிறுத்திக்கொள் தயவுசெய்து..
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ வாழ்ந்தவள் நீ..
ஆயினும் ஏன் அடிக்கடி என் கனவில் வந்து போய் வதைக்கிறாய்..

வம்பு செய்து நீ விளையாட நானொன்றும் அந்த வந்தியத்தேவன் இல்லையே..
அவன் வழிந்துகொண்டு நின்றிருப்பான் பார் அங்கே வஞ்சியர்தம் வாசலிலே..

ஒரு வார்த்தை நீ கேட்டிருந்தால் உடனே கிளம்பியிருப்பேன், கழுதையை ஓட்டிக்கொண்டே சென்றிருப்பேன்‌  அந்த கலிபோர்னியா வரையிலும் கூட..

எதற்கும் உதவாத அந்தக் குதிரையை ஓட்டிக்கொண்டு இலங்கை வரை போனதென, அந்தக் குரங்கை போய் விரும்பிவிட்டாய் எதுவும் யோசிக்காமலே..

சென்ற வழியெல்லாம் அவன் குதிரையை மட்டுமா ஓட்டினான்??
கேட்டுப்பார் பூங்குழலியிடம், கட்டுமரக் கப்பலில் அவன் கடலை போட்ட கதைகளை கடலளவு சொல்லுவாள்..

முடிந்த கதை நமக்கெதற்கு,
முற்றுப்‌பெற்ற பின் இனி பேசியும் பயனென்ன..

ஏதோ சில நாட்கள் எனக்கு முன்னதாய்ப் பிறந்துவிட்டாய் என்பதால் மட்டுமே விட்டுத் தந்து விட்டேன் அந்த வழிந்த தேவனுக்கு உன்னை..

இழந்து விட்டேன் என்ற கோபத்தில் ஏதும் செய்து விடுவேன் என்றெல்லாம் ஐயம் கொள்ளாதே..

எண்ணியது நடக்காது போனதை எண்ணி அண்டை வீட்டுக்காரனிடம் சண்டைக்கெல்லாம் போகமாட்டேன் நான்..

அதற்கு இங்கு அண்டை வீட்டுக்காரனும் இல்லை, அவனிடம் சண்டைக்கு போக நான் கரிகாலனாகவும் இல்லையே என்ன செய்ய !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!