முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமையிலும் நீ !!

இனம்புரியாத வேதனையொன்று இதயத்தினூடே ஏதோ செய்கிறது.. 

இன்னதென்றே விளங்காத அது
சோற்றுருண்டையில் சிக்கிய முள்ளாய் உள்ளூர உறுத்திக் கொண்டேயிருக்கிறது.. 

எவருமற்று தனித்துப் போன இவ்விரவில் தூக்கமற்று இருளில் தேடி துழாவுவது எல்லாம் உன் கைகளையே..

இனி எப்போதும் எனக்கென்று இல்லாது போன, எவ்வளவு தேடினும் அகப்படா அவை மட்டுமே போதுமாயிருக்கிறது எனக்கு..

என்ன செய்ய, நீயற்ற தனிமையிலும் கூட என் துணையிருப்பது நீ மட்டுமே !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!