முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விதிகள் மூன்று !!

கிணறு ஒன்றை எட்டிப் பார்க்க எண்ணினால் அதற்கான மூன்று விதிகள்..

முதலில் எட்டிப் பார்க்கும்போது தவறி உள்ளே விழுந்து விடாதிருப்பது முக்கியம்..


அப்படியே விழுந்து விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அக்கிணறு உங்களை விழுங்கி விடுவதற்குள் சுதாரித்துக் கொண்டு வெளிவந்து விடுவது இரண்டாவது விதி..

முக்கியமானதும் மூன்றாவதும் அதை உற்று பார்க்கும்போது உண்டாகும் காட்சி மயக்கத்தில் உங்களை நீங்கள் இழக்காமலிருத்தல் மிக மிக அவசியம்..

அன்பு செலுத்துவதற்கான மூன்று விதிகளும்
அவையேதான் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!