முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் மற்றும் நான் மட்டுமே !!

தனியாகவே கடற்கரைக்கு செல்பவன் நான்.. அங்கு தனியாக அமர்ந்து அலைகளின் ஒசைக்கு மத்தியில் அந்த அஸ்தமனத்தை ரசிக்கிறவன் நான்..

தனியாக ஒரு காஃபி போட்டு அதை தனியாகவே ருசித்துக் குடிப்பவன்..


இரவில் இளையராஜாவை மட்டுமே துணைக்கு வைத்துக் கொள்பவன் நான்..

முதல் நாள் முதல் காட்சிக்குக் கூட தனியாகவே சென்று கூட்டத்திற்கு நடுவே கூச்சலிட்டுக் கொள்பவன் நான்..

அவ்வப்போது ஆழ்மனதின் அசைவிற்கேற்ப தனியாக நானும் எனது பைக்கும் என ஒரு நெடும்பயணத்திற்கு செல்பவன்,
உலகம் மறந்து ஒரு நெடும் தூக்கத்தில் ஆழ்பவன்..

உங்கள் யாராலும் என் உடன் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை,
தனியாகவே தனியாக இருந்துவிட்டுப் போகிறேன் நான்..

"தனியாகவா?"
"தனியாகப் போகிறாயா?"
என்று மட்டும் கேட்காதீர்கள்..

என் தனிமையின் பக்கத்தில் உங்களது அனுதாபம் வந்து அமர்ந்துகொள்வதை சகிக்க முடிவதில்லை இப்போதெல்லாம் என்னால்..

இப்படித்தான் நான்,
அவ்வப்போது பேசிக்கொள்வேன் அதுவும் தனியாகவே,
கேட்டும் கேளாததுபோல் கிளம்பி விடுங்கள் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!