முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கென்றே ஒரு காதல் !!

ஒருத்தி உங்களை ஏற்றுக் கொண்டாள் அல்லது நிராகரித்தாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல எப்போதும்..

உலகில் உங்கள் இருப்பு அழிந்த பின்னும், உங்களுக்கென்று சொல்லிட ஒரு காதலேனும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்..

அதில் உங்களை தொலைத்து, பித்தாகி சித்தம் தொலைத்தாலும், உங்களுக்காக ஒருத்தி இருந்ததையும், அப்படி அவள் உலகத்தில் நீங்கள் இல்லாது போனாலும், உங்கள் உலகமாய் அவள் மட்டுமே இருந்ததை உங்கள் காதலாய் சொல்லிச் செல்லுங்கள்..

உங்களுக்கானவள் இன்னும் வராமல் இருக்கலாம், நீங்கள் அவளை இன்னும் அந்தளவிற்கு காதலிக்காமல் இருக்கலாம் அல்லது எங்கோ ஒரு மூலையில் உங்களைப் போலவே அவளும் என்னவன் எங்கேயோ என ஏங்கிக் கொண்டும் இருக்கலாம்..

ஏதோ ஒரு தருணத்தில் அந்த உண்மைக் காதல் உங்களையும் தொடுமாயின், உங்கள் அருகிலும் ஒருத்தி அமர்ந்து கொண்டு, கண்களில் காதலை தேக்கி வைத்துக் கொண்டு ஓயாது சண்டை பிடித்தாலும் அலுக்காது ஆயிரம் முறை கூட கேட்பாள், 'என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்'

ஒரு காதல் கதையைக் கூட கொண்டிருக்காத வாழ்வெல்லாம் என்ன வாழ்வு !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!