முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குள வரலாறு !!

நெடுங்காலமாக குளம் ஒன்று இருந்தது எங்கள் ஊரில்..

தலைமுறைகள் பல பார்த்தவர்களுக்கு கூட
தெரியவில்லை, அது உருவாகிய காலம் எதுவென்று..

பின் காலத்தின் போக்கில் மரமெல்லாம் விறகாகிட, வரப்பெல்லாம் விலை போய்விட, குளமும் மாறிப்போனது ஊர் கூடி நிற்கும் பஸ் ஸ்டாண்டாய்..

பெயருக்குக் கூட அந்த குளத்தின் நீரையே பார்த்திராத தலைமுறைகளும் கூட இன்னமும் அழைக்கின்றன அந்த இடத்தை குளத்து பஸ்டாண்ட் என்றே..

தலைமுறைகள் கடந்தும் இப்படியாக வாழ்ந்து கொண்டு தானிருக்கிறது, பல குளங்கள் காணாமல் போன வரலாறு !!‍

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!