முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் போதும் எனக்கு !!

'தோன்றின் புகழொடு தோன்றுக'
என்ற வள்ளுவன் வாக்கை
மீண்டும் மீண்டும் எவரும் நினைவுப்படுத்தத் தேவையில்லை எனக்கு..

எந்த இதழின் அட்டைப்பக்கத்திலும்
என் படங்கள் இடம்பெறத் தேவையில்லை..

எந்த தொலைக்காட்சி தலைப்புச் செய்தியிலும் நான் வரப் போவதில்லை..

உலகின் சாதனைப் புத்தகங்களில் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

இத்தனை பெரிய பூமியில் நானும் சற்றே இருந்துவிட்டு போகிறேனே ஏதோவொரு மூலையில்..

சில இதயங்களின் பாரங்களை இறக்கி வைத்த நினைப்புகள் போதுமெனக்கு எப்போதும் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!