முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றுவரை நானறியேன்!!

காதல் வழிய எத்தனையோ இரவுகள் கவிதைகள் படித்து கதைகள் பேசி விட்டாயிற்று..

இன்று இரண்டொரு நிமிடங்கள் பேச உனக்கு நேரமில்லாது போனதில் வருத்தமேதும் இல்லையெனக்கு என்றே நினைத்துக்கொள் நீ!!

இருப்பினும் கேட்கிறேன் இன்னொரு முறை இறுதியாக பேசிப் பார்க்கலாம் என,

நீயாய்ப் பேசினால் காதல் அழிக்க காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பாய்,
அதனால் நான் பேசவும் சற்று இடம் கொடுத்து மீண்டும் நாமாக வழியென்ன எனப் பேசலாம்..

பேசி முடித்தாயிற்று எனத் தோன்றிய பின் நீயே ஒரு முடிவெடு..

தொலைந்து போனது காதல் தான் என்றால் சொல், காற்றில் தேடி பார்கிறேன்..

உடைந்து போனது இதயம் என்றால் நீ நில், நான் போய்விடுகிறேன் இந்த காற்றோடு..

அமாவாசை வானத்தில் நிலவாய் நீயிருந்தாய் என்னோடு துணையாய்,
இன்று பௌர்ணமி காலத்தில் கூட இல்லாமல் போனதன் காரணம் இன்றுவரை நானறியேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!