முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவிர்த்திருக்கலாம்!!

துன்பத்தில் ஆதரவாய் பற்றிக் கொள்ளவும்,

பயத்தில் பாதுகாப்பதற்கும்,

மகிழ்ச்சியில் ஆசையோடு கோர்த்துக் கொள்ளவும்,

காய்ச்சல் கண்டாலும், கொடுங்கனவு என்றாலும் மீண்டு வருவதற்கும்,

உலகமே வெறுத்தாலும் மறுத்தாலும் முன்னோக்கி எடுத்துச் செல்லவும்,

இன்னும் இவ்வுலகின் அனைத்தையும் எதிர்கொள்ளவும் உன் கைகள் போதுமாயிருந்தது!

குழந்தைக்கு தாயின் மடியை போல அதுவே என் அடைக்கலமாயிருந்தது!

அதுவே என் மொத்த உலகமுமாயிருந்தது!!

வருடங்கள் பல கழித்து உணர்ச்சிகளற்று பழைய நண்பர்கள் என மற்றவர் முன்னிலையில் கைகள் குலுக்கிக் கொண்ட அத்தருணத்தை,
நீயாவது இல்லை நானாவது தவிர்த்திருக்கலாம் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!