முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காத்திருப்பு மட்டுமே தெரியும்!!

உதிர்ந்து கொண்டிருக்கிறது,
நாட்கள் ஒவ்வொன்றாக!
உதிர தொடங்கி விட்டன,
கனவுகளும் ஆசைகளும் கூட!
எதற்காக இந்த காத்திருப்பு என்றும், எத்தனை காலமென்றும் கூட மறந்து போகலாம் எனக்கு,
அத்தனைக்குப் பின்னும் கூட
நான் காத்து கொண்டே தான் இருக்கிறேன், இருப்பேன்!

இப்போதெல்லாம் பழகிவிட்டது காத்திருப்பு எனக்கு..
வேறு என்ன செய்வதென்று தெரியாது.. தெரிந்ததெல்லாம் அது மட்டுமே இப்போது!

காத்திருக்கிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!