முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க்ரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச!?

ஒருத்தியை  காதலித்தேன் நான்..
அவளும் காதலித்தாள் என்னை..
நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது எங்கள் காதலும்..

திடீரென சண்டை போட்டாள்,
வம்படியாக என்னைத் தவிர்த்தாள்,
இறுதியாக ஒருநாள் ஏனென்றே தெரியாத ஒரு பிரேக் அப்பை பரிசளித்தாள்..

எவ்வளவோ கெஞ்சினேன்..
எதற்கு பிரேக் அப் என்று
கேட்டு மன்றாடினேன்..
கொஞ்சமும் இரக்கம் காட்டாதவள், க்ரீஸ் டப்பாவை எட்டி உதைப்பது போல் எட்டி உதைத்தாள் என்னையும் என் காதலையும்..
சமீபத்தில் தான் கேள்விபட்டேன்,
அடுத்ததாய் வந்த அவளது காதலன்
அவளை கைவிட்டு விட்டதாக‌..
காதல் தோல்வியின் வலி புரிந்த நான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினேன்..

உடைந்து அழுதாள்,
அவள் கண்ணீர் மொபைல்
வழியாக என் இடது காதில் வடிந்தது..
அவள் அழுகையில் நானும் சோகமானேன்..

என் மனதின் மூலையிலிருந்த சைத்தான் ஒன்று வலது காதுக்குள் வாய் வலிக்க கத்தியது..
அவளிடம் கேள், கேட்டு விடு
என்று கதறியது..
என்னவென்று தெரியுமா?

"ஆமா நீ க்ரீஸ் டப்பாவை  எப்படி உதைச்ச"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!