முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜென்சி அக்காவின் அழுகை!!

பிரபா அண்ணாவுக்கு ஜென்சி அக்காவை ரொம்ப பிடித்திருந்ததால், அக்காவுக்கும் அண்ணாவை ரொம்ப பிடித்திருந்ததால்,

கல்யாணத்தின் முதல் நாள் இரவு அக்கா காணாமல் போய் விடுவாள் என்று அம்மாவும் அத்தைகளும் சித்தியும் அவளின் அறையிலேயே காவலர்களாய் மாறிப் போயிருந்தனர்..

இரவெல்லாம் கேட்டு கொண்டே இருந்த அந்த அக்காவின் அழுகையின் இடையே உறங்கி போனேன் நான் புரியாத வயதில்..

இப்போதெல்லாம் உறக்கமின்றி எனக்காக அழும் இரவுகளில், அக்காவுக்கும் சேர்த்தே அழுகிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!