முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உன்னிடத்தில் நான்!!

நீ அறியாத கணங்களில் உன்னை ரசிக்கும் பொழுதுகளில் எல்லாம் குட்டி பூனையாகிறேன்!

உன் மடியில் தவழ்ந்து, என்னைத் தழுவா உன் கைகளுக்கு ஏங்கி பின் உன் கொஞ்சல்களில் மயங்கும் தருணங்களில் நாய்க் குட்டியாகிறேன்!

உன் மேனியில் அங்காங்கே துள்ளி விளையாடி, வரிகளால் வர்ணங்கள் செய்யம் பொழுதெல்லாம் அணிலாகிறேன்!

உன் செல்ல அதட்டல்களில் பயம் கொள்ளும் தருணம் அசடுவழியும் ஒரு குழந்தையாகிறேன்!

நீ கோபம் கொண்டு சிவந்து போகையில் எல்லாம், உன்னைக் கொஞ்சி பேசும் கிளியாகிறேன்!

எங்கும் எவரிடத்தும் உன்னை விட்டுக் கொடுக்காது நிற்கும், உனக்காய் இருக்கும் தருணங்களில் உன்னவனாகிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!