முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதன் ஆனதன் விளைவுகள்!!

சாயங்கால நேரம், சாலையில் அடிபட்டு சாகக் கிடக்கிறது குட்டி நாயொன்று..

விட்டால் போதுமென அலுவலகம் விட்டு வீடு போய் சேரும் பரபரப்பில்
சில கண்கள் வெறுப்போடும்,
பல கண்கள் பரிதாபத்தோடும் நாயைக் கடக்கின்றன வெறுமனே பார்த்தபடியே..

மனம் பொறுக்காத அந்தவொரு நொடியில் நீலச் சிலுவையை அழைத்துப் பார்க்கிறேன்..
எடுக்கப்படாத அந்த அழைப்பு தந்த ஒருவித குரூர நிம்மதியோடு இப்போது கடந்து போகிறேன் நானும்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!