முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலிக்க தொடங்குகிறேன் நான்♥️♥️

நான் செய்தது தவறுதான்,
நன்றாகவே தெரியும் எனக்கு..

மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டியதும்,
சமாதானம் செய்திருக்க வேண்டியதும் நியாயமாக நான்தான்..

ஆனாலும் என்ன செய்ய?
அதற்கு நேரெதிராக நீயாக வந்து என்னை சமாதானம் செய் என முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைகிறேன் வீராப்பாக..
அந்த மன்னிப்புக் கோரப்படும் வரை இப்படியே இறுக்கத்துடன் இருப்பதாக உத்தேசமும் கூட..

இதெல்லாம் ஈகோ-வா அல்லது இளம்பிள்ளைத் தனமா எனத் தெரியாது திரியும் ஒரு பைத்தியத்திடம் இருந்து வேறென்ன எதிர்பார்த்து விட முடியும் நீ!?

செய்துவிட்ட தவறின் குற்ற உணர்ச்சியில் இருக்கும் என்னை,
இன்னும் வெறுக்கவில்லை நீ,
இன்னமும் விரும்பத்தான் செய்கிறாய் என்பதை இந்த மன்னிப்புக் கேட்டல்தான் உறுதிபடுத்துகிறது..

நான் உனக்கு வேண்டும் என்பதற்காக, என்னை உன்னில் தக்க வைப்பதற்காக செய்யாத பிழைக்கு நீ கேட்கும் இந்த மன்னிப்புதான் உன் காதலானது!

செய்யாத ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்க வைக்குமளவு ஈவு இரக்கமற்றவன்‌ அல்லன் நான்..
உன்னிடம் மட்டுமே இப்படி‌, அதற்காக ஆணாதிக்கவாதியும் அல்லன் நான்..
இவ்வளவிலும் என் காதல் நீயறிவாய் என்பதே என் காதலானது..

மன்னிப்புக் கேட்பதின் வழி
நீயென்னை மன்னிக்கிறாய்!
மன்னிக்கப்பட்டதின் திருப்தியில் நான் உன்னை தடையின்றி காதலிக்கத் தொடங்குகிறேன் மீண்டும்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!