முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புடவை அணிந்த பட்டாம்பூச்சி🦋💙

ஆண்டு முழுதும் சுடிதார் தேவதையாய் சுற்றி திரிந்த அவளுக்கு,
திடீரென ஓர் ஆசை துளிர்விட்டது கடைசி நாளில் புடவை பட்டாம்பூச்சியாய் கல்லூரியை சுற்றிவர..

அலமாரி முழுதும் அரை நாள் தேடித் தேடி தேர்ந்தெடுத்ததில் அம்மாவின் புடவை ஒன்று மயில் கலரில் மாட்டியது..
அதில் ஆரம்பம் எது முடிவு எது என தெரிந்து கொள்ளவே அரை நேரம் தீர்ந்து போயிருந்தது..

அம்மாவின் உதவியோடு அதை ஒருவழியாய் அணிந்து முடிக்கவே அரை யுகம் ஆகிப் போன நிலையில்,
புடவையை அவள் அணிந்து கொள்ள அழகோ அவளை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தது..

இடை தெரியாமல் மறைக்க தேடினாள் காப்பூசி ஒன்று..
மறு பிறவியென்றால் எப்படியாவது காப்பூசியாய் பிறக்க கடவுளிடம்
வேண்டி கொண்டிருந்தது அவள் வீட்டு கண்ணாடி..

கல்லூரி வாசலை நெருங்க நெருங்க வார்த்தைகள் இதழ் நழுவ,
இடை நழுவிய புடவையை இழுத்து பிடித்தது பூவை அவளின் விரல்கள்..

இல்லாத இடையை வேறு வழியின்றி இறுக்கி பிடித்து கொண்டது அந்த புடவையின் விரல்கள்..

சிறகை மறந்த அந்த வண்ணத்துப்பூச்சி புடவை அணிந்து பொறுமையாக வாசலோரம் வலம் வருவதை காணும் வரை,
கல்லூரியின் கடைசி நாளை எண்ணி எந்த ஆணும் வருத்தப்பட்டதாய் தெரியவில்லை!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!