யாரும் அறிந்திடாது,
எவர் கண்ணுக்கும் புலப்படாது,
இத்தனை நாளாய் நினைவின் பேழைக்குள் நீ பொதிந்து வைத்திருந்த வடுவாகிப் போன பழைய காயமொன்றை என்னிடம் திறந்து காண்பிக்கிறாய் முதல் முதலாக..
தழும்பை வருடிக் கொடுப்பதால் எந்த
வலியும் ஆறப்போவதில்லை, எதுவும் மாறப்போவதில்லை - தெரியும் எனக்கு..
இப்போது இங்கே உன்னோடு இருக்கும் நான் அப்போதும் இருந்திருந்தால் இதனை ஆகவிட்டிருக்க மாட்டேன்.. அது தெரியும் உனக்கு..
அதனை அறிவிக்கத் தான் என்னிடம் அந்த ஆறாத் தழும்பை காண்பிக்கிறாய்..
அதனை ஆமோதிக்கத்தான் இப்போது நான் முத்தமிடுகிறேன் அந்த தழும்பின் மீது..
இதோ என் இதழ்களின் ரேகைகளால் இப்போதைக்கு மூடி விடுகிறேன் அதை.. மீண்டும் வெளித் தெரிவதாய் இருந்தால் சொல், மிச்ச நேரத்தையும் அங்கு முத்தமிட்டே கழிக்கிறேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக