முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதித்த கரிகாலன் எனும் காதல் பித்தன்!

எத்திசையும் நடுங்கிட ஒத்தையிலே போர் புரிந்து, பல தலைகளை கொய்து வந்தவன் அவன்..

ஏனோ வெள்ளைப் பூ அவளின் மீளா மாய வலையில் சிக்கி,
காதல் பித்தம் மொத்தமாய் தலைக்கேறி,
தலை பிய்த்துக் கொண்டு,
பித்தம் நித்தம் குறைய வேண்டி, கள்ளும் பாட்டும் இரத்தமும் சதையும் எனக் கேட்டவன் இப்போது,

காஞ்சியிலே நிற்கிறான் எஞ்சிய அவளின் கொஞ்சம் நினைவுகளோடு!

அவளால் உயிர் விட்டான் என்பது மன்னனின் வரலாற்றில் விழுந்த மண் என ஊர் தூற்றினாலும்,

அவளால் உயிர் விட்டான் என்பதுவே அவனது இத்தனை ஆண்டு காலத்தின் இறுதிபட்ச இன்பமாயும் ஆறுதலாயும் இருந்திருக்கும் அவனுக்கு!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!