முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவள்‌ பெயர் ராணி!!

துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்..

கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு..

முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய்‌ உறங்குகிறாள்‌ அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து‌ அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும்‌ சேர்த்து..

கண்டும்‌ காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை.. 

இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!