முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்துட்டுதான் போட்டுமே!!

வடக்கன்ஸ் வர்றானுங்க.. வடக்கன்ஸ் வர்றானுங்க.. என்று படாத பாடு பட்டு கூப்பாடு போட்டோம்..

இனி கூப்பிட்டாலும் வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டார்கள் அவர்கள்..

அடுத்த ரயிலிலும் ஒரு வேளை வரலாம் மீண்டும் அவர்கள்..
அவர்கள் வருவதெல்லாம் சில வேளை உணவுக்காகவும்,
உடல் உழைத்து கரைந்து உங்களை கரையேற்றி அப்படியே முடிந்தால் கொஞ்சம் அவர்கள் குடும்பங்களையும் கரையேற்றிக் கொள்ளத்தானே!

அதோ அடுத்த ரயிலிலும் வந்துட்டானுங்க வடக்கன்கள் என்பீர்கள்..
வந்துவிட்டுத்தான் போட்டும் விடுங்களேன்!
வடக்கன்கள் என்ன! வந்தேறிகள் என்ன!
நீங்கள் என்ன, நானென்ன!
எல்லாம் ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களில் கண்ணிமைத்து திறக்கும் பொழுதில் நடந்து விடுகிறது..

வடக்கன்கள் இங்கே பிழைப்புக்காக வருவாதானால் வரட்டுமே..
வாழத்தானே இந்த வாழ்க்கை!
எப்படியாயினும் எதுவாயினும் வாழத்தானே எல்லாமே..
அலைந்து திரிந்து அலைக்கழிந்து இறுதியில் எல்லாமே இந்த அரைஞாண் வயிற்றுக்குத்தானே..
அதே வயிறுதானே அவர்களுக்கும்,
வாழுந்து விட்டுத்தான் போட்டுமே!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!