மேல் பொழியும் மழையை,
இரவு நிரப்பும் நிலவை,
ஓயாத அந்த கடலை,
குறையாத இந்த காற்றை,
அசைய மறுக்கும் மலைகளை,
ஆசை காட்டி மறையும் நட்சத்திரங்களை,
சில நல்லவைகளை பல கெட்டவைகளை என எதையுமே உன் நினைவு வராமல் ரசிக்க முடியவில்லை இப்போதெல்லாம்!!
இது பிடிக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை எனக்கு!!
நீ என் வரமா சாபமா புரியவில்லை.. எதுவாயினும் அது நீயாயிற்றே!!
கருத்துகள்
கருத்துரையிடுக