முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவள் கையெழுத்து!!

அங்குமிங்கும் அறைக்குள் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கையில் சட்டென்று சிக்கியது அலமாரிக்குள் ஆழ்ந்து போன புத்தகம் ஒன்று..

புத்தகத்தை தூசு தட்டுகையில் எனக்குள்ளும் ஞாபகப் புழுதி கிளம்புகிறது மெல்ல..
தானாய்‌ கை தேடிச் சென்றடைந்த இடம் மூன்றாம் பக்கத்தில் காகிதத்தோடு காகிதமாய் பதிந்து போன அவளது கையொப்பம்..

கோணலான கையெழுத்து தான்‌‌ அவளுக்கு, அவளைப் போலவே அதுவும்..
இருந்தும் அச்சிட்ட‌ எழுத்துக்கள் கூட அவள்‌ பெயருக்கு அருகினில் நிற்க முடியாது..

எதையோ தேடத் தொடங்கிய நான் அவளின் அந்த கையெழுத்துக்குள் என்னை தொலைக்க தொடங்குகிறேன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக..

என்ன செய்யட்டும்.. சில விஷயங்களை எவ்வளவு முயன்றாலும் முற்றிலுமாக அழிக்கவோ, மறைக்கவோ முடிவதில்லையே..

எங்கு தேடிப் போய் நீங்கள் எப்படி ஒளிந்து கொண்டாலும் அந்த ஞாபகச் சிறகுகள் காற்றில் படபடத்துக் கொண்டே தான் கிடக்கின்றன!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!