முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்படிக்கு, எங்கிருந்தோ ஓர் ஜன்னலோரவாசி!!

சொந்தமாய் ஒரு வீடு என்பதெல்லாம் பெரும்பான்மையானோரின் பேராசைக் கனவாகிப் போயிருக்கையில்,

ஒருவேளை கனவுகள் தாண்டி கற்கள் கொண்டும் வீடு கட்டுவதாக இருந்தால் தயவுசெய்து பெரியதொரு ஜன்னல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்..

உங்கள் கேசம் கலைத்துப் போட்டு விளையாட காற்றோட்டம் அங்கிருக்கும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்..

உங்களுக்கென ஒரு ஜன்னலோரம் இருப்பின் உலகின் எந்தவொரு துயரையும் நீங்கள் கடந்துவிடலாம் அல்லது மறந்துவிடலாம் என்பதற்கு,
தாய் மடியென அதன் கம்பிகளில் தலை சாய்த்து தன்னைத் தொலைத்தோர் ஏராளம் சாட்சியுண்டு..

ஒரே ஒரு நிபந்தனை,
அந்த ஜன்னலை சாத்திவிட்டு
மீண்டும் திறப்பதற்கு முன் மனம் விட்டு
அழுதிருப்பது மட்டும் முக்கியம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!