முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரிந்து போவோம் வா..

இந்தப் பிரிவு போதுமானதாக இல்லை நம் காதலுக்கு...

இன்னும் பிரிந்து போவோம், தொலைந்து போவோம்
மிக தூர தூரமாய்..

உன் தூது எதுவும் என்னை சேர முடியாத தூரம், என் நினைவுகள் நினைத்தாலும் உன்னை அடைய முடியாத தூரம்..

நான் யாரென்று நீ மறந்து போகின்ற தூரம், நீ யாரென்றே நான் அறியாது போகின்ற தூரம்..

இவ்வாறு மிக மிக தூரங்கள் பயணித்துக் களைத்த பிறகு, இளைப்பாற எங்கேனும் இப் பிரபஞ்ச பெருவெளியில் மீண்டும் ஒரு மரத்தடி நிழலிலோ, மலையடிவாரத்திலோ முதல் முறை சந்திப்பது போல் சந்தித்து கொள்வோம் வா..


மீதி அத்தியாயங்களை எல்லாம் அதன் பிறகான காதலில் எழுதிக் கொள்ளலாம் !!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!