முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறடி நானும், அரை சாண் நீயும் !!

கிட்டத்தட்ட ஆறடி நான் இருந்தும்
கிடந்து யாசிக்கிறேன் உன் அரை ஜான் காதலுக்காக..

குட்டையே அடையாளமாய் போன உனக்குத்தான் எத்தனை பெரிய உயரம் என் குட்டி இதயத்தில்..

எவராயிருப்பினும் தலைகுனியச் செய்யும் நீயும்,
எல்லோரையும் தலைநிமிரச் செய்யும் நானும் எப்படியும் ஆகச் சிறந்த ஜோடிகள் தானே?

வளர்ந்தாலும் குற்றம் வளராமலிருந்தாலும் குற்றம்..
குற்றத்திற்கென வரையறைகள் அற்ற இவ்வுலகில் குற்றவாளிகள் நாமிருவரும் ஒரே சிறையில்
வாடத்தான் யாசிக்கிறேன்,
வாழத்தான் நேசிக்கிறேன்..

தலைநிமிர்ந்தே பழகிய நீ
ஒருமுறை வெட்கத்தில் தலைகுனி..

வாடக் காத்திருக்கும் வாடாமல்லியோடு உன் காதலைக் கவர குனிந்தே பழகிய நான் தலை நிமிர்கிறேன் உன் முன்னால் மண்டியிட்ட படி !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!